ஸ்டாலின் தான் வர்றாரு! விடியல் தர போறாரு... !
English Tamil

எஸ். ஆர். ராஜா

எஸ். ஆர். ராஜா, தாம்பரம் தொகுதியின் நகராட்சி தலைவராக இருந்து, தமிழ்நாட்டு சட்டமன்ற பேரவைக்கு இரண்டு முறை தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார். 2006-2011 மற்றும் 2016-2021 ஆகிய ஆண்டுகாலத்தில் தாம்பரம் தொகுதிக்காக பல நற்பணிகளை மேற்கொண்டார்.
தாம்பரம் இரயில் நிலையத்தின் தரத்தை மேம்படுத்தியதில் தொடங்கி நூலக கட்டிடங்கள், பள்ளி மற்றும் அங்கன்வாடி கட்டிடங்கள், பேருந்து நிழற்குடைகள், சமுதாய நல்கூடங்கள், குளங்கள் மேம்படுத்துதல், குடிநீர் விநியோக பணிகள் , தாம்பரம் தொகுதிக்காக ஆர். டி. ஒ அலுவலகம், தாலுகா அலுவலகம் கட்டியது, கேம்ப் ரோடு சந்திப்பில் மேம்பாலம் எழுப்பி போக்குவரத்து சீர் செய்தல், பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றியது போன்ற பல நற்பணிகளால் தொகுதி மக்களின் மனதில் மிக சிறந்த இடத்தை பிடித்தவர்.
இம்முறை தமது தேர்தல் வாக்குறுதியில் தொகுதி மக்களின் நீண்ட நாள் கனவான தாம்பரம் மாநகராட்சி ஆக நிறைவேற்றும் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், மெட்ரோ ரயில் திட்டத்தினை தாம்பரம் வரை நீடிக்கவும், சிறு வியாபாரிகளுக்கு நிரந்தரமாக கடைகள் அமைத்து கொடுக்கும் திட்டம், ஜி. எஸ். டீ மற்றும் பிற சாலைகளில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.