ஸ்டாலின் தான் வர்றாரு! விடியல் தர போறாரு... !
English Tamil

2016 முதல் 2021ஆம் ஆண்டு வரை தாம்பரம் தொகுதியில் திருமிகு எஸ் .ஆர் .ராஜா அவர்கள் ஆற்றிய பணிகள்.

 • திரு . எஸ் .ஆர் .ராஜா அவர்கள் எடுத்த பெருமுயற்சியின் பேரில் மாண்புமிகு டி .ஆர் .பாலு எம். பி அவர்களின் பெரும் துணையோடு தாம்பரத்தில் 3வது ரயில் முனையம் அமைத்து ,தாம்பரம் ரயில் நிலையத்தை தரம் உயர்த்தியது.
 • மேற்கு தாம்பரம் – பீர்க்கண்காரணை –பெருங்களத்தூர் – முடிச்சூரில் ஆகிய பகுதிகளில் ,மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளத்தை சமாளிக்க ஒருங்கிணைந்து மழை நீர் வடிகால் பணிகள் பெருவடிகால்வாய் (கட் அண்ட் கவர் திட்டம்) ரூ 13.73 கோடி செலவில் நிறை வேற்றப்பட்டது.
 • தாம்பரம் சிட்லபாக்கம் மாடம்பாக்கம் ஆகிய பகுதிகளில் ரூ 111.88 லட்சம் செலவில் 7நூலக கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது.
 • தொகுதியில் 4 பள்ளி கட்டிடங்களுக்கு ரூ 73.80 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
 • 6 அங்கன்வாடி கட்டிடங்களுக்கு ரூ 44.60 லட்சம் நிதி வழங்கப்பட்டது.
 • அகரம் தென் மதுரபாக்கம் முடிச்சூர் ஆகிய ஊர்களில் சமுதாய நலக்கூடங்கள் ரூ 216.13 லட்சம் செலவில் கட்டப்பட்டது.
 • சிட்லபாக்கம், பீர்க்கன்காரணை ,மாடம்பாக்கம் உள்ளிட்ட ஊர்களில் சுடுகாடு மற்றும் காரிய மண்டப கட்டிடங்கள் ரூ 78.58 லட்சம் செலவில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
 • ரூ 131 லட்சம் செலவில் குடிநீர் விநியோக பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது
 • ரூ57.11 லட்சம் செலவில் 6 நியாய விலைகள் கடை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது.
 • ரூ 74.84 லட்சம் செலவில் 6 பேருந்து நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளது.
 • 11 பூங்காக்கள் நிர்மாணித்தல் மற்றும் பணிகள்
 • ரூ 130.39 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
 • ரூ 13.50லட்சம் செலவில் 13 உயிர்மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது .
 • ரூ 38.87 லட்சம் செலவில் 2 குளங்களின் மேம்பாட்டு பணிகள் நடைபெற்றது.
 • தாம்பரம் மீன் மார்க்கெட் ரூ 40 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்டது
 • தாம்பரத்தில் மாநகர போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வறை மற்றும் விழுப்புரம் கோட்ட போக்குவரத்து பணிமனைக்கு சாலை ஆகியவற்றிற்கு ரூ 56.2 லட்சம் ஒதுக்கப்பட்டது
 • 2 , மாற்றுத்திறனாளிகளுக்கு , வாகனங்கள் வழங்க ரூ 1.06 லட்சம் நிதி செலவிடப்பட்டுள்ளது.
 • பாரத மாதா தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றிய போது பாதிக்கப்பட்ட 43 குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
 • பெருங்களத்தூரில்( லெவல் கிராஸ்ஸிங் எண் 32 ) எல் சி 32 ல் ரயில்வே மேம்பாலம் கட்ட 2010ல் அனுமதி பெற்று 2019 ல் நிர்வாக அனுமதி பெற்று, மேம்பால பணிகள் , ரூ 234 கோடி செலவில் நடைபெற்று வருகிறது.